West Indies vs England: இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பல்..! முதல் செசனிலேயே 3 விக்கெட் காலி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவாகின.
3வது டெஸ்ட் போட்டி க்ரெனெடாவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
க்ரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்ப்பெல், ஷமர் ப்ரூக்ஸ், க்ருமா பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா(விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசஃப்.
இங்கிலாந்து அணி:
அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), டேனியல் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், க்ரைக் ஓவர்டன், ஜாக் லீச், சாகிப் மஹ்மூத்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 7 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஜோ ரூட் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். 4ம் வரிசையில் இறங்கிய டேனியல் லாரன்ஸ் 8 ரன்னில் ஆட்டமிழக்க, 46 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் நிலைத்து நின்று ஆடிவருகிறார். முதல் செசனில் 27 ஓவரில் இங்கிலாந்து அணி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. 26 ரன்களுடன் களத்தில் நிற்கும் அலெக்ஸ் லீஸுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்துள்ளார்.