Asianet News TamilAsianet News Tamil

போதை மருந்து சர்ச்சை.. உலக கோப்பை வாய்ப்பை இழக்கும் அதிரடி வீரர்

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
 

england player alex hales might be missed world cup place
Author
England, First Published Apr 28, 2019, 12:27 PM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. நல்ல பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து அணி உள்ளது.

england player alex hales might be missed world cup place

இந்நிலையில், உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மீது உற்சாக போதை மருந்து எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு தொடர் முடிந்ததுமே இங்கிலாந்து வீரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ராயல் லண்டன் போட்டிகளிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கூறி பாதியில் விலகியிருந்தார். ஆனால் போதை மருந்து எடுத்துக்கொண்டததற்காக அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவர் அந்த தொடரிலிருந்து விலகியதாகவும் இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை நெருங்கியுள்ள நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் போதை மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளதால் அவர் உலக கோப்பையில் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணி தற்காலிக அணிதான். அந்த வகையில் மே 23ம் தேதிக்குள் அணி தேர்வை மாற்றி கொள்ளலாம். ஏற்கனவே மதுபான விடுதியில் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் 6 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போதை மருந்து விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். அடிக்கடி பிரச்னைகளில் சிக்குவதால் அவர் உலக கோப்பை அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios