இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் 2 மாதங்கள் தங்கியிருந்து மிக நீண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடக்கவுள்ளன. பிப்ரவரி 4ம் தேதி முதல் ஒருநாள் தொடரும் அதன்பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளன.

ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அந்த தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இரண்டு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தென்னாப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், பாட் ப்ரௌன், சாம் கரன், டாம் கரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், சாஹிப் மஹ்மூத், டேவிட் மாலன், மேத்யூ பார்கின்சன், அடில் ரஷீத், ஜோ ரூட்,  ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ். 

இங்கிலாந்து டி20 அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பாட் ப்ரௌன், சாம் கரன், டாம் கரன், ஜோ டென்லி, க்றிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், மேத்யூ பார்கின்சன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மார்க் உட். 

4 டெஸ்ட் போட்டிகளிலும் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் ஆடுவார்கள் என்பதால், அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் அவர்கள் ஓய்வில் இருப்பதால் டி20 அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.