Asianet News TamilAsianet News Tamil

Ashes Series: ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! சீனியர் வீரருக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

england names 12 member team for the first ashes test against australia
Author
Brisbane QLD, First Published Dec 7, 2021, 3:19 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி(நாளை) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி வரும் 8ம் தேதி தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர், உலக கோப்பையை போன்றது. அதனால் ஆஷஸ் தொடரில் இரு அணிகளுமே வெறித்தனமாக விளையாடும். அதுமட்டுமல்லாது, இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், இந்த தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமானது.

நாளை(8ம் தேதி) பிரிஸ்பேனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்நிலையில், 12 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில், ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவது உறுதியாகியுள்ளது. ஜாக் க்ராவ்லி அணியில் எடுக்கப்படவில்லை. டேவிட் மலான், ஸ்டோக்ஸ், பட்லர், ஆலி போப், வோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜானி பேர்ஸ்டோவிற்கு அணியில் இடம் இல்லை. ஃபாஸ்ட் பவுலர்களாக ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், மார்க் உட் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ஆடுவார். இது நீண்ட தொடர் என்பதால், அவரது ஃபிட்னெஸை பராமரிக்கும் விதமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios