வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்து வருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்ப்பெல், ஷமர் ப்ரூக்ஸ், க்ருமா பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டி சில்வா (விக்கெட் கீப்பர்), கீமார் ரோச், அல்ஸாரி ஜோசஃப், வீராசாமி பெர்மால், ஜெய்டென் சீல்ஸ்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), டேனியல் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், க்ரைக் ஓவர்டன், மார்க் உட், ஜாக் லீச்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பல்:

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் 4 ரன்னிலும், ஜாக் க்ராவ்லி 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஜோ ரூட் 13 ரன்னிலும், டேனியல் லாரன்ஸ் 20 ரன்னிலும் ஆட்டமிழக்க, 48 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இதையும் படிங்க - IPL 2022: ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஆஃப்கான் அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

காப்பாற்றுவாரா பென் ஸ்டோக்ஸ்:

இதையடுத்து பென் ஸ்டோக்ஸும் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இதையும் படிங்க - ஜடேஜா பெருந்தன்மையான மனசுக்காரர்.. அவரோட பவுலிங் கோட்டாவை விட்டுக்கொடுத்தார்..! அஷ்வின் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 4 போட்டிகளில் தோற்று படுமட்டமான தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, அதிலிருந்து மீண்டு, அந்த தோல்விக்கு மருந்தாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறது.