ஆண்டர்சன் - பிராட் வேகத்தை சமாளிக்க முடியாமல் சரணடைந்த நியூசிலாந்து.! முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

england beat new zealand by 267 runs in first test and lead the series by 1 0

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஸ்காட் குஜெலின், டிம் சௌதி (கேப்டன்), நீல் வாக்னர், பிளைர் டிக்னெர்.

இங்கிலாந்து அணி:

பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் அபாரமாக பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் 89 ரன்கள் அடித்தார். ஆலி போப் 42 ரன்களும், பென் ஃபோக்ஸ் 38 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். அபாரமாக ஆடிய டாம் பிளண்டெல் சதமடித்தார். பிளண்டெல் 138 ரன்களையும், டெவான் கான்வே 77 ரன்களையும் குவிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் அடித்தது.

19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களுமே பங்களிப்பு செய்தனர். ஜோ ரூட் (57), ஹாரி ப்ரூக்(54) மற்றும் பென் ஃபோக்ஸ்(51) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். ஆலி போப்(49), ராபின்சன்(39) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, 2வது இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது இங்கிலாந்து.

ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி

மொத்தமாக 393 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற, 394 ரன்கள் என்ற கடினமான இலக்கை கடைசி இன்னிங்ஸில் விரட்டிய நியூசிலாந்து அணி, 28 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆரம்பத்தில் ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகளை வீழ்த்த,  பின்வரிசை வீரர்களை ஆண்டர்சன் வீழ்த்த, நியூசிலாந்து அணி வெறும் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios