பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான முதல் டெஸ்ட்டுக்கான 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கிடையே, அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி ஆடுகிறது. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தனி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி மட்டும் மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய அதே அணி தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், சிப்ளி, ஜாக் கிராவ்லி, ஓலி போப் ஆகிய பேட்ஸ்மேன்களும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஸ்பின்னராக கடந்த தொடரில் ஆடிய டோமினிக் பெஸ்ஸும், ஃபாஸ்ட் பவுலர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட் ஆகியோரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, சாம் கரன், ஓலி போப், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.