Sri Lanka vs Bangladesh: ஏமாத்தி விளையாடிய வங்கதேசம் – அவுட்டா, நாட் அவுட்டா? குழப்பிய நடுவர்கள்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி ஏமாற்றி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2ஆவது டி20 போட்டி நேற்று சில்ஹெட் பகுதியில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணியில் அவிஸ்கா பெர்ணாண்டோ டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கமிண்டு மெண்டிஸ் 37 ரன்களில் நடையை கட்டவே, சமரவிக்ரமா 7 ரன்னிலும், அசலங்கா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த தசுன் ஷனாகா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் 20 மற்றும் 32 ரன்கள் எடுக்கவே இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச வீரர்கள் களமிறங்கினர். இதில் போட்டியின் 3ஆவது ஓவரை பினுரா பெர்னாண்டோ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சௌமியா சர்கார் பேட்டிங் செய்தார். அப்போது பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்று கேட்ச் ஆனது. இதற்கு நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார்.
ஆனால், இதற்கு சௌமியா சர்கார் டிஆர்எஸ் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மூன்றாவது நடுவர் டிவி ரீப்ளேயில் பரிசோதனை செய்தார். அதில், பந்து பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இலங்கை வீரர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். கள நடுவரிடம் முறையிட்ட போதிலும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். பின்னர் போட்டி தொடங்கப்பட்டது. கடைசியில் வங்கதேச அணியானது 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் சௌமியா சர்கார் 26 ரன்களும், நஜ்முல் ஹூசைன் சாண்டோ 53 ரன்களும் (நாட் அவுட்), தவ்ஹீத் ஹ்ரிடோய் 32 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது.