Asianet News TamilAsianet News Tamil

கோலிக்குப் பதில் இவர் தான் கரெக்டா இருப்பார் - தினேஷ் கார்த்திக் டெசிஷன்!

கோலி இல்லாத போது அவருக்குப் பதிலாக ராகுல் திரிபாதி தான் சரியாக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

Dinesh Karthik said that Rahul Tripathi is the best choice to replace virat kohli place
Author
First Published Feb 3, 2023, 4:19 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் ராகுல் திரிபாதி விளையாடினார். இந்த நிலையில், கோலியின் இடத்தை நிரப்புவதற்கு ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வு என்று தினேஷ் கார்ர்த்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விராட் கோலி ஓய்வு பெற வேண்டிய நேரம் வரும் போதோ அல்லது அவர் இல்லாத போதோ அவருக்குப் பதிலாக 3ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி - ஒரேயொரு முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா!

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருவரும் விளையாடியிருக்கின்றனர். அப்போது ராகுல் திரிபாதியின் பேட்டிங் திறமையை தினேஷ் கார்த்திக் கண்டுள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் நன்றாக விளையாடினாலும், சரி விளையாடாவிட்டாலும் சரி, இந்திய கிரிக்கெட் அணியில் அவர் சிறப்பாக விளையாடுவார். விராட் கோலி விளையாடினார் என்றால் ஓகே. மற்றபடி அவரது இடத்தை நிரப்புவதற்க் முதல் வாய்ப்பாக ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

போலீஸ் கெட்டப்பில் யாரையோ தேடும் தோனி: வைரலாகும் போட்டோ!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தான் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்று சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார். 

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் வருகை!

Follow Us:
Download App:
  • android
  • ios