போலீஸ் கெட்டப்பில் யாரையோ தேடும் தோனி: வைரலாகும் போட்டோ!
போலீஸ் கெட்டப்பில் தோனி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட், டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என்று அனைத்தையும் பெற்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம் பெற்று கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் தோனி நடித்துள்ளார். இதன் காரணமாக தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோரது நடிப்பில் உருவாகும் Lets Get Married என்ற படத்தையும் தயாரிக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி - ஒரேயொரு முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா!
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக ராஞ்சி மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டிக்கு தோனி தனது மனைவி சாக்ஷியுடன் வந்திருந்தார். அதற்கு முன்னதாக சக வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில், தற்போது போலீஸ் சீருடையில் புல்லட் புரூட் உடை அணிந்து ஒரு கையில் லத்தியும், மற்றொரு கையில் துப்பாக்கி எடுப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் வருகை!
இந்தப் படத்தைப் பார்த்து தோனி எந்தப் படத்தில் நடிக்கிறார்? ஹீரோவாக நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி வருகின்றனர். இந்தப் போலீஸ் கெட்டப் தோனிக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இது விளம்பரமாகவே இருந்தாலும், தோனி சினிமாவில் நடித்தாலும் ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். அவர் எப்போது சினிமாவில் நடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
முழு உடல் தகுதியுடன் பும்ரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பு?