தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பு!
முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்தது. இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே அணிக்கு மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
சிஎஸ்கே சாம்பியனானது எப்படி? சிஎஸ்கேயின் வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?
மேலும், 171 ரன்கள் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடியாக ஆடிய சிஎஸ்கே அணிக்கு கடைசியாக ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில், தோனிக்கு இந்த சீசனில் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில், இதுவரையில் விளையாடி வந்தார்.
டெட்லிஃப்டிங்கில் 60 கிலோவை அசால்ட்டா தூக்கி அனைவரது கவனம் ஈர்த்த 8 வயது சிறுமி அர்ஷியா கோஸ்வாமி!
இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். மும்பையில் உள்ள கோகிலபெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?