இந்திய கிரிக்கெட்டின் தனி சாம்ராஜ்ஜியம் தோனி. 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே அணியின் கேப்டனாகிவிட்டார். கேப்டனாக, இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தார் தோனி. 

இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் வாய்ந்தவர் தோனி. தோனி களத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தவே மாட்டார். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலையும் பதற்றமே படாமல் கூலாக கையாள்வார். அதனால்தான் மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 

எதிரணி வீரர்களை தோனி பெரிதாக ஸ்லெட்ஜிங் செய்ததில்லை. தோனி ஸ்லெட்ஜிங் செய்த அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று உள்ளது. 2006ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடரை இந்திய அணி தான் வென்றது.

ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தான் வென்றது. அந்த போட்டியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க டெயிலெண்டர்களை, ஸ்டம்புக்கு பின்னால் நின்று தோனி ஸ்லெட்ஜ் செய்தார். அந்த வீடியோ இதோ..