ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. 9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கேவை கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி இன்று எதிர்கொள்கிறது. முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் தோனி கடந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு போதுமான ஓய்வு தேவை என்பதால் இன்றைய போட்டியில் ஆடுவாரா என்று தெரியவில்லை. 

எனினும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி, சிக்ஸர்களாக பறக்கவிட்டுள்ளார். இன்றைய போட்டி நடக்க உள்ள பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியின்போது பெரிய ஷாட்டுகளை அதிரடியாக ஆடி தெறிக்கவிட்டுள்ளார் தோனி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.