Asianet News TamilAsianet News Tamil

அப்பா - மகன் 2 பேரையுமே அவுட்டாக்குன தோனி.. 20 வருஷ சுவாரஸ்ய சம்பவம்

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. 
 

dhoni has done impossible thing in this ipl season
Author
India, First Published Apr 26, 2019, 1:50 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. சிஎஸ்கே அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே ஏப்ரல் 11ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கின் கேட்ச்சை தோனி பிடித்தார். ஷர்துல் தாகூரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பராக் அவுட்டானார். 

dhoni has done impossible thing in this ipl season

தற்போது ரியானின் கேட்ச்சை பிடித்த தோனி, 20 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தையை ரஞ்சி போட்டி ஒன்றில் ஸ்டம்பிங் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்(1999-2000) பீஹார் மற்றும் அஸ்ஸாம் அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி போட்டியில் அஸ்ஸாம் அணியின் தொடக்க வீரர் பராக் தாஸை அப்போதைய இளம் விக்கெட் கீப்பரான தோனி ஸ்டம்பிங் செய்தார். தந்தையின் விக்கெட்டை வீழ்த்திய தோனி, 20 ஆண்டுகளுக்கு பின் மகனின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 

இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, அந்த ரஞ்சி போட்டியின் ஸ்கோர் கார்டுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios