இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது.முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு
2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. 3வது டெஸ்ட் தர்மசாலாவில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் சீரமைப்புப்பணிகள் நடந்துவருகின்றன. மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதால் 3வது டெஸ்ட் போட்டியை நடத்த அந்த மைதானம் சரிப்பட்டுவராது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக இந்தியா-இலங்கை இடையேயான டி20 போட்டி நடந்தது.
நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை
தர்மசாலாவில் நடத்த முடியாதபட்சத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம், ராஜ்கோட், இந்தூர், புனே ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக இன்னும் ஒருசில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
