IPL 2023: டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் சாதனையை முறியடித்து 3ம் இடத்தை பிடித்து டெவான் கான்வே சாதனை
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 92 ரன்கள் அடித்த டெவான் கான்வே, டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் சாதனையை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி அபாரமாக ஆடிவரும் நிலையில், சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிவருகிறார் தொடக்க வீரர் டெவான் கான்வே.
நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டெவான் கான்வே மீது நம்பிக்கை வைத்து அவருக்கு சிஎஸ்கே அணி தொடர் வாய்ப்பளித்த நிலையில், அதற்கான பலனை இப்போது அனுபவித்துவருகிறது.
சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் காலங்காலமாக அசத்தி மேட்ச் வின்னர்களாக திகழ்ந்திருக்கின்றனர். மேத்யூ ஹைடன், மைக் ஹசி வழியில் அந்த மரபை காக்கிறார் டெவான் கான்வே. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய டெவான் கான்வே 52 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்றாலும் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை. அவரது அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.
IPL 2023: 200 ரன்கள் அடித்தும் சிஎஸ்கே தோற்றதற்கு என்ன காரணம்..? தோனி கருத்து
201 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இந்த போட்டியில் அடித்த 92 ரன்களின் மூலம் டி20 கிரிக்கெட்டில் டெவான் கான்வே 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 5000 ரன்களை 144 இன்னிங்ஸ்களில் அடித்த டெவான் கான்வே, டி20 கிரிக்கெட்டில் விரைவில் 5000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமை பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்தை ஷான் மார்ஷுடன் பகிர்ந்துள்ளார்.
IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்
பாபர் அசாம் 145 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டினார். 144 இன்னிங்ஸ்களில் 5000 ரன்கள் அடித்த கான்வே, 3ம் இடத்தை ஷான் மார்ஷுடன் பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்லும்(132), 2ம் இடத்தில் கேஎல் ராகுலும்(143) உள்ளனர்.