MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்

IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்து, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அந்த அணியின் தோல்விகளுக்கு கேப்டன் டேவிட் வார்னர் தான் காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 30 2023, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர் அணிகள் வெற்றி தோல்வியை மாறி மாறி பெற்றுவருகின்றன. இந்த சீசனில் படுமோசமாக ஆடிவருவது டெல்லி கேபிடள்ஸ் அணி தான். கேப்டன் ரிஷப் பண்ட் ஆடாததால் இந்த சீசனில் டேவிட் வார்னர் கேப்டன்சியில் களமிறங்கிய டெல்லி அணி, முதல் 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! பலமடையும் ரோஹித் சர்மா படை
 

35

ரிஷப் பண்ட் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் ஆகிய வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. மிட்செல் மார்ஷ் நன்றாக ஆடிவருகிறார். அக்ஸர் படேல் மட்டுமே அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கிறார். கேப்டன் டேவிட் வார்னர் இந்த சீசனில் 8 போட்டிகளில் 306 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 118 ஆகும். 306 ரன்களை இவ்வளவு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார் என்றால், வார்னர் அதிகமான பந்துகளை ஆடியிருக்கிறார். 

45

270-280 பந்துகளை எதிர்கொண்டு இந்த 306 ரன்களை அடித்திருக்கிறார் என்பதால் அவரது பேட்டிங் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. டெல்லி அணிக்கு அவரது இன்னிங்ஸ் பிரயோஜனமாக இல்லை. இந்த சீசனில்டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டை ஏற்கனவே வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதிரடியாக ஆடமுடியவில்லை என்றால் ஐபிஎல்லில் ஆட வராதீர்கள் என்று வார்னரை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் வார்னரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன்சி செய்து அசத்துகிறார் ஹர்திக் பாண்டியா..! அவரோட தனித்துவமே இதுதான் - கவாஸ்கர்

55

வார்னர் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், இனிமேல் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியால் கம்பே க் கொடுக்க முடியாது. அவர்  ஃபார்மில் இல்லாததால் ஒரு பேட்ஸ்மேனாக அவரது சிறப்பான பங்களிப்பை கொடுக்கவில்லை. ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சீக்கிரம் அவுட்டானதால் தான், டெல்லி அணி இலக்கை நெருங்கவாவது செய்தது. வார்னர் 50 பந்துகள் ஆடியிருந்தால் 50 பந்துகள் வீணாகியிருக்கும். டெல்லி அணி 50க்கும் மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். இந்த சீசனில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் வார்னர் அடித்திருக்கிறார். ஆனால் ஸ்டிரைக் ரேட் மோசமாக இருப்பதால், அவர் அடித்த ரன்களால் டெல்லி அணிக்கு பிரயோஜனமே இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
 

About the Author

KV
karthikeyan V
டெல்லி கேபிடல்ஸ்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved