IPL 2023: 200 ரன்கள் அடித்தும் சிஎஸ்கே தோற்றதற்கு என்ன காரணம்..? தோனி கருத்து

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 200 ரன்கள் அடித்தும் கூட, 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிக்க விடாமல் பஞ்சாப் அணியை தடுத்து வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிய நிலையில், தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 
 

ms dhoni reveals the reason for csk defeat against punjab kings despite score 200 runs in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது.  தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். 37 ரன்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடிய டெவான் கான்வே அரைசதம் அடித்தார். மொயின் அலி 10 ரன்களுக்கும், ஜடேஜா 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டெவான் கான்வே சதத்தை நோக்கி ஆடினார். 92 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை.  கடைசி ஓவரின் கடைசி 2 பந்திலும் சிக்ஸர் அடித்து தோனி சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.

IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்

201 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (28) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (42) ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதர்வா டைட் 17 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். 15 ஓவரில் பஞ்சாப் அணி 129 ரன்கள் அடித்திருந்த நிலையில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 16வது ஓவரில் லிவிங்ஸ்டன் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஆனால் அந்த 4 பந்தில் 22 ரன்களை குவித்து வெற்றிக்கான வழியை அமைத்துவிட்டுத்தான் சென்றார். லியாம் லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 4 சிக்ஸருடன் 40 ரன்களும், சாம் கரன் 29 ரன்களும் அடித்தனர். 10 பந்தில் 21 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த ஜித்தேஷ் ஷர்மாவும் கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்காமல் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்தில் சிக்கந்தர் ராஸா மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் சிங்கிள் அடிக்க, 3வது பந்தில் ராஸா ரன் அடிக்கவில்லை. எனவே கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 2 பந்திலும் தலா 2 ரன்கள் அடித்த, சிக்கந்தர் ராஸா, கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி கடைசி பந்தில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! பலமடையும் ரோஹித் சர்மா படை

போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, கடைசி சில ஓவர்களில் நாங்கள் இன்னும் நன்றாக ஆடியிருந்தால் கூடுதலாக 10-15 ரன்கள் அடித்திருக்கலாம். எங்கள் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். 200 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். எங்கள் பவுலிங் சரியில்லை. 2 ஓவர்கள் படுமோசமாக இருந்தன. பதிரனா நன்றாக பந்துவீசினார் என்று தோனி தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios