IPL 2023: GT vs DC போட்டி டாஸ் ரிப்போர்ட்..! டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்ரைய போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி கேபிடள்ஸ் அணி, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற சூழலில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிட்செல் மார்ஷுக்கு உடல்நிலை சரியில்லாததால் ரைலீ ரூசோ இந்த போட்டியில் ஆடுகிறார். கலீல் அகமது காயத்திலிருந்து மீண்டு வந்து அவர் ஆடுவதால் முகேஷ் குமார் ஆடவில்லை.
ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், ரிப்பல் படேல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.