IPL 2023: கடைசி ஓவரை சூப்பரா வீசிய இஷாந்த் சர்மா.. ஹர்திக் பாண்டியா கடைசிவரை நின்று நோ யூஸ்.! DC த்ரில் வெற்றி

ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

delhi capitals thrill win against gujarat titans by 5 runs in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடைசி இடத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், ரிப்பல் படேல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஃபிலிப் சால்ட்டை டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது ஷமி. அதன்பின்னர் கேப்டன் டேவிட் வார்னரும் 2 ரன்னுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் ரைலீ ரூசோ(8), மனீஷ் பாண்டே(1) மற்றும் பிரியம் கர்க்(10) ஆகிய மூவரையும் ஷமி வீழ்த்த, 23 ரன்களுக்கே டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5 விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே இழந்து திணறிய டெல்லி அணியை அமான் கான் - அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அக்ஸர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த அமான் கான், 44 பந்தில் 51 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ரிப்பல் படேல் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 
131 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ரிதிமான் சஹா(0), ஷுப்மன் கில்(6), விஜய் சங்கர்(6), டேவிட் மில்லர்(0) ஆகியோர் ஏமாற்றமளிக்க, 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதன்பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் 26 ரன்கள் அடித்து, 5வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார். ஆனால் மிகவும் மெதுவாக ஆடி 33 பந்தில் 26 ரன்கள் அடித்தார்.

ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த ஹர்திக் பாண்டியா அவசரப்பட்டு அடித்து ஆடாமல் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டத்தை எடுத்து சென்றார். 17 ஓவரில் குஜராத் அணி 94 ரன்கள் அடித்திருந்த நிலையில், 18வது ஓவரை வீசிய கலீல் அகமது, அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அபினவ் மனோகரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்

19வது ஓவரை அன்ரிக் நோர்க்யா வீச, முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி 3 பந்தில் ராகுல் டெவாட்டியா 3 சிக்ஸர்கள் அடிக்க, கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே குஜராத் டைட்டன்ஸுக்கு தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, தனது அனுபவத்தை பயன்படுத்தி அருமையாக வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்த பாண்டியா, 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3வது பந்தில் ரன் அடிக்காத டெவாட்டியாவை 4வது பந்தில் அவுட்டாக்கினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் ரஷீத் கான் களத்திற்கு வர, 5வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் சிங்கிள் மட்டுமே கொடுத்து பவுண்டரி கொடுக்காமல் அருமையாக வீசி டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் இஷாந்த் சர்மா.

20 ஓவரில் 125 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios