IPL 2023: அரைசதம் அடித்து டெல்லி கேபிடள்ஸின் மானத்தை காப்பாற்றிய அமான் கான்! குஜராத் டைட்டன்ஸுக்கு எளிய இலக்கு

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்து, 131 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

delhi capitals set easy target to gujarat titans in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடைசி இடத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், ரிப்பல் படேல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஃபிலிப் சால்ட்டை டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது ஷமி. அதன்பின்னர் கேப்டன் டேவிட் வார்னரும் 2 ரன்னுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஆஷஸ் தொடருக்கு ரெடி ஆகாம நீ ஏன்டா ஐபிஎல்லில் போய் ஆடுற..? ஹேசில்வுட்டை விளாசிய முன்னாள் கேப்டன்

அதன்பின்னர் ரைலீ ரூசோ(8), மனீஷ் பாண்டே(1) மற்றும் பிரியம் கர்க்(10) ஆகிய மூவரையும் ஷமி வீழ்த்த, 23 ரன்களுக்கே டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5 விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே இழந்து திணறிய டெல்லி அணியை அமான் கான் - அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அக்ஸர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த அமான் கான், 44 பந்தில் 51 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ரிப்பல் படேல் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 131 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios