IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்

ஐபிஎல் 16வது சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

delhi capitals ideal playing eleven for ipl 2023

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் கோல்டன் டக்! ODI உலக கோப்பையில் 4ம் வரிசையில் யார் இறங்கலாம்? யுவராஜ் சிங் கருத்து

டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியதால் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதால் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகிவிட்டார். அதனால் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். டேவிட் வார்னர் தலைமையிலான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

டேவிட் வார்னரும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். செம ஃபார்மில் இருக்கும் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் 3ம் வரிசையில் ஆடுவார். 4ம் வரிசையில் ஃபிலிப் சால்ட்டும், 5ம் வரிசையில் சர்ஃபராஸ் கானும் ஆடுவார்கள். ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் அக்ஸர் படேல் மற்றும் லலித் யாதவ் ஆகியோரும் மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக அன்ரிக் நோர்க்யா, சேத்தன் சகாரியா மற்றும் கலீல் அகமது ஆகிய மூவரும் ஆடுவார்கள். 

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட், சர்ஃபராஸ் கான், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, சேத்தன் சக்காரியா, கலீல் அகமது.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios