Asianet News TamilAsianet News Tamil

ஒரு கையிலயே பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பிய டிவில்லியர்ஸ்.. வீடியோ

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் ஆர்சிபி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். ஷமி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தார்.

de villiers sent ball out of stadium by one hand video
Author
Bangalore, First Published Apr 25, 2019, 12:36 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் படேல் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். 81 ரன்களுக்கே ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் டிவில்லியர்ஸும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். கடைசி 2 ஓவர்களில் இருவரும் இணைந்து 48 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து 202 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது ஆர்சிபி.

de villiers sent ball out of stadium by one hand video

203 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல் ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து அபாரமாக ஆடினர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் ஆர்சிபி வீழ்த்திய பிறகு, மில்லர் சரியாக ஆடவில்லை. எனினும் நிகோலஸ் பூரான் அதிரடியாக ஆடி மிரட்டினார். 

கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த அஷ்வின், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

de villiers sent ball out of stadium by one hand video

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் ஆர்சிபி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். ஷமி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தார். 3 மற்றும் 4வது பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் டிவில்லியர்ஸ். ஐந்தாவது பந்தை லெக் திசையில் ஃபுல் டாஸாக வீசினார் ஷமி. எப்படி போட்டாலும் அடிக்கும் முனைப்பில் இருந்த டிவில்லியர்ஸ், அந்த பந்தை அப்படியே ஃபைன் லெக் திசையில் தூக்கி அடித்தார். பேலன்ஸ் மிஸ் ஆகி ஒரு கை பேட்டிலிருந்து விடுபட்டது. எனினும் பந்தின் வேகத்திற்கும் டிவில்லியர்ஸ் பேட்டை சுழற்றிய வேகத்திற்கும் பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றது. அந்த வீடியோ இதோ.. 

Follow Us:
Download App:
  • android
  • ios