வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் நடப்பதால் இந்த ஆண்டு அனைத்து அணிகளும் அதிகமான ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றன. அந்தவகையில், இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.
தாக்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணி:
தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, டைஜுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின்..!
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் 3ம் வரிசை வீரர் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஒருமுனையில் கேப்டன் தமிம் இக்பால்(23), முஷ்ஃபிகுர் ரஹீம்(16) மற்றும் ஷகிப் அல் ஹசன்(8) ஆகிய சீனியர் வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷாண்டோ 58 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் மஹ்மதுல்லா 31 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 47.2 ஓவரில் 209 ரன்கள் அடித்தது.
முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா
210 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நடப்பு ஒருநாள் சாம்பியன் இங்கிலாந்து அணி வீரர்கள் ஜேசன் ராய்(4), ஃபிலிப் சால்ட்(12), ஜேம்ஸ் வின்ஸ்(6), ஜோஸ் பட்லர்(9), வில் ஜாக்ஸ்(26), மொயின் அலி(14) ஆகிய வீரர்கள் ஒருமுனையில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி தனி ஒருவனாக போராடி சதமடித்த டேவிட் மலான், 114 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
