ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!

பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்திலேயே தரையிறங்கியுள்ளார்.

David Warner, who flew in a helicopter and landed on the Sydney ground - viral video rsk

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 3 ஆம் தேதி நடந்தது. இதில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 299 ரன்கள் எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டிராவிட்டின் அறிவுறைகளை பின்பற்ற மறுக்கும் இஷான் கிஷான் – ரஞ்சி டிராபியில் விளையாடலயா?

இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, மார்னஸ் லபுஷேன் 62 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களும் எடுக்கவே ஆஸ்திரேலியா 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரை கைபற்றியது.

ஒரு விக்கெட், 60 ரன்கள் (நாட் அவுட்) – ரோகித் சர்மாவே பாராட்டிட்டாரு, இனி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு தான்!

இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில், தான் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.

Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி – முதல் வீரராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றுள்ளார். இன்று நடக்கும் 34ஆவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. இதில் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார்.

14 மாதங்களுக்கு பிறகு ரிட்டர்ன் – ஓடி வந்து ரன் அவுட்டான ரோகித் சர்மா, வேடிக்கை பார்த்த கில் – என்ன நடந்தது?

இந்தப் போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். ஹண்டர் பள்ளத்தாக்கில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து பறந்து மாலை 5 மணிக்கு முன்னதாக மைதானத்திற்கு வந்தார். அவர் தனது பிரியாவிடை டெஸ்டின் போது "தேங்க்ஸ் டேவ்" லோகோ வரையப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள அவுட்ஃபீல்டில் இறங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma Run Out: ஏமாந்த ரோகித் சர்மா – கச்சிதமாக முடித்துக் கொடுத்த ஆள் இன் ஆள் அழகுராஜா ஷிவம் துபே!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios