டிராவிட்டின் அறிவுறைகளை பின்பற்ற மறுக்கும் இஷான் கிஷன் – ரஞ்சி டிராபியில் விளையாடலயா?
இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். ஆனால், இஷான் கிஷன் ரஞ்சி டிராபி தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் ராகுல் டிராவிட்டின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை மற்றும் ரஞ்சி டிராபி 2024 க்கு தொடர்ந்து கிடைக்காமல் இருக்கிறார். ஜார்கண்ட் இஷானைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா பயணத்திலிருந்து பாதியிலேயே கிளம்பினார்.
இதன் காரணமாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஜேஎஸ்சிஏ) செயலாளர், மாநில அணிக்காக விளையாடும் தனது விருப்பம் குறித்து கிஷன் யாரிடமும் பேசவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. “அவரைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை.
Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி – முதல் வீரராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை!
எவ்வாறாயினும், அவர் எங்களிடம் கூறும்போதெல்லாம் அவர் நேரடியாக பிளேயிங் லெவன் அணியில் நுழைவார், ”என்று ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஜேஎஸ்சிஏ) செயலாளர் தேபாசிஷ் சக்ரவர்த்தி கூறியுள்ளார். கிஷன் குறித்து பேசிய டிராவிட், ஊடகங்கள் தெரிவித்தது போல் அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். “இஷான் கிஷன் இந்திய அணிக்கு திரும்ப முதலில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன், ரஞ்சி டிராபி போட்டியில் பங்கேற்க வேண்டும். ஆனால், அவர் பங்கேற்கவில்லை.
இஷான் கிஷனுக்கு 25 வயதாகும் நிலையில், மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் தோனியுடன் பார்ட்டியுடன் ஈடுபட்டதற்காக பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு கோபமடைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இஷான் கிஷன் கலந்து கொண்டார். ஆதலால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.