IPL 2023: புஷ்பா 2 படத்திற்கு காத்திருக்க முடியாது; ஹேப்பி பர்த்டே புஷ்பா: அல்லு அர்ஜூனுக்கு வார்னர் வாழ்த்து!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது மகளுடன் இணைந்து நடிகர் அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா பட ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளில் ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இன்னும் ஒரு போட்டிகள் கூட வெற்றி பெறவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன. இன்று ராஜஸ்தானின் ஹோம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவே 2 போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தனது மகளுடன் இணைந்து புஷ்பா ஸ்டைலில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்திய பிரபலங்க நடித்து ஹிட்டாலும் பாடல்களுக்கு ரீல்ஸ் வெளியிட்டு வருவார்.
IPL 2023: ஒரே ஒரு விக்கெட் காலியானதற்கு சட்டையெல்லாம் திறந்து போட்டு ஆட்டம் போட்ட காவ்யா மாறன்!
இவ்வளவு ஏன், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் பட கெட்டப், நாட்டு நாட்டு பாடல் கெட்டப்பில் தான் இருப்பது போன்று இருக்கும் மீம்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புட்டபொம்மா பாடலுக்கு கூட டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் தங்களது தோழியுடன் இணைந்து அல்லு அர்ஜூன் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.