டெல்லி கேபிடல்ஸ் வீரர் டேவிட் வார்னர், சிஎஸ்கே கேப்டனான எம்.எஸ்.தோனியின் ஹெட் பேண்ட் குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 10 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதுவும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்ப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணியும் மோதுகின்றன. இதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Scroll to load tweet…

இந்த சீசனில் தோனி வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து விளையாட இருக்கிறார். இந்திய அணியில் தோனி அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அதே போன்று ஒரு தோற்றத்துடன் இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில் தான் டெல்லி கேபிடல்ஸ் வீரர் டேவிட் வார்னர் தோனியின் ஹெர்ஸ்டைல் குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வார்னர் கூறியிருப்பதாவது: புதிய ஹெட் பேண்ட் தோனிக்கு நன்றாக இருக்கிறது. இப்படி இருக்கும் தோனியை தனக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.

Scroll to load tweet…