Asianet News TamilAsianet News Tamil

AUS vs ENG: வார்னர், டிராவிஸ் ஹெட் அபார சதம்.. இங்கிலாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அபாரமான சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட  48 ஓவரில் 355 ரன்களை குவித்து 356 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

david warner and travis head half centuries help australia to set tough target to england in last odi
Author
First Published Nov 22, 2022, 1:46 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடந்துவருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த போட்டியில் ஆடாத இங்கிலாந்து கேப்டன் பட்லர் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் ஆடுகின்றனர். 

NZ vs IND: நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த தீபக் ஹூடா

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் டாவ்சன், டேவிட் வில்லி, ஆலி ஸ்டோன்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 269 ரன்களை குவித்தனர். வார்னர் 102 பந்தில் 106 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் பற்றி 11 ஆண்டுக்கு முன் ரோஹித் போட்ட டுவீட்!இப்போது வைரல்; ரோஹித்தின் விஷன்.. கொண்டாடும் ரசிகர்கள்

மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 130 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 152 ரன்களை குவித்தார். ஸ்மித்(21) மற்றும் ஸ்டோய்னிஸ்(12) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 42வது ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டெத் ஓவர்களில் அடித்து ஆடிய மிட்செல் மார்ஷ் 16 பந்தில் 30 ரன்களை விளாச, 48 ஓவரில் 355 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 356 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios