நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடிக்க, 11 ஆண்டுகளுக்கு முன் சூர்யகுமார் யாதவ் பற்றி ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட் செம வைரலாகிவருகிறது. 

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த மாபெரும் சக்தியாக வளர்ந்துவருகிறார் சூர்யகுமார் யாதவ். உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடியதன் விளைவாக, தன்னை இந்திய அணியில் தவிர்க்கமுடியாதபடி செய்து, இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக வளர்ந்துவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

NZ vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் அபாரமாக பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது சதமடித்தார். 51 பந்தில் 111 ரன்களை குவித்தார். இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வழக்கம்போலவே சில அசாத்தியமான ஷாட்டுகளை ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டு நியூசிலாந்தை மிரட்டினார். இந்திய அணி அடித்த 191 ரன்களில் 111 ரன்கள் சூர்யகுமார் யாதவ் அடித்தது. எஞ்சிய 80 ரன்களை மற்ற வீரர்கள் சேர்ந்து அடித்தனர்.

சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வியந்து புகழ்ந்திருந்தார். தான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் சூர்யகுமாரின் இந்த இன்னிங்ஸும் ஒன்று என்றும், அவர் ஆடிய பல ஷாட்டுகளை இதற்கு முன் பார்த்ததேயில்லை என்றும், அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர் என்றும் கேன் வில்லியம்சன் புகழ்ந்திருந்தார்.

ஒருநாள் போட்டியில் 277 ரன்கள். தொடர்ந்து 5 சதங்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் CSK

இந்நிலையில், சூர்யகுமார் யாதவை பற்றி ரோஹித் சர்மா11 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட டுவீட் இப்போது வைரலாகிவருகிறது. தொலைநோக்கு பார்வையுடைய ரோஹித் சர்மா என்று ரசிகர்கள் ரோஹித்தை புகழ்ந்துவருகின்றனர்.


Scroll to load tweet…