பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, டேவிட் மில்லர் மற்றும் ரிஸ்வானின் அரைசதங்களால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்து, 191 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இன்று முல்தானில் நடந்துவரும் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், கைரன் பொல்லார்டு, குஷ்தில் ஷா, கார்லஸ் பிராத்வெயிட், உஸாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஈசானுல்லா, முகமது இலியாஸ்.

ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

பால் ஸ்டர்லிங், ஹசன் நவாஸ், காலின் முன்ரோ, ராசி வாண்டர்டசன், அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான் (கேப்டன்), ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், அப்ரார் அகமது, ருமான் ரயீஸ், முகமது வாசிம்.

முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் வழக்கம்போலவே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 50 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூசோ அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்துஆடி அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ஆனால் ரூசோ 30 பந்தில் 36 ரன்கள் மட்டுமே அடித்தார்.

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை

அதன்பின்னர் டேவிட் மில்லர் மற்றும் பொல்லார்டு இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசினார். பொல்லார்டு 21 பந்தில் 32 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 190 ரன்களை குவித்த முல்தான் சுல்தான்ஸ் அணி, 191 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.