Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: இந்திய டெஸ்ட் அணியில் அவங்க 2 பேரும் புறக்கணிக்கப்பட்டதை என்னால் நம்பவே முடியல- கனேரியா

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் 2 முக்கியமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
 

Danish Kaneria names two key omissions from India's test squad for South Africa tour
Author
Chennai, First Published Dec 10, 2021, 8:00 PM IST

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் சர்மா, ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷுப்மன் கில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோர் மிடில் ஆர்டர் வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட் மற்றும் சஹா ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாகவும், அஷ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளனர்.

பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ், இஷாந்த் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக இருந்துவந்த நிலையில், அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே சந்தேகமாகியிருப்பதால், ரோஹித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி குறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, ஷுப்மன் கில் புறக்கணிப்பு பெரிய ஆச்சரியம். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் கில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க கண்டிஷனில் ஆஃப் ஸ்பின்னர்கள் சோபித்ததில்லை. எனவே ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹர் கண்டிப்பாக அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கனேரியா கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios