5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடிவரும் நிலையில், அண்மையில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியோ படுமோசமாக ஆடிவருகிறது. அந்த அணி பெற்ற ஒரு வெற்றி கூட பென் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால் கிடைத்ததே. மற்றபடி அனைவருமே சொதப்பிவருகின்றனர். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் இருவர் ஆஷஸில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். அந்த இருவரில் ஒருவரான ஸ்மித் பேட்டிங்கில் மிரட்டிக்கொண்டிருக்க, மற்றொருவரான ஜோ ரூட், சொதப்பிக்கொண்டிருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் படுமோசமாக ஆடிவருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் ஸ்மித்தும் பவுலிங்கில் கம்மின்ஸும் அசத்திவருகின்றனர். நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அந்த இன்னிங்ஸில் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே பர்ன்ஸையும் ரூட்டையும் வீழ்த்தினார். 

ரூட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். டெக்னிக்கலகா ஸ்ட்ராங்கான பேட்ஸ்மேன். அப்படியிருக்கையில், சிறந்த பேட்ஸ்மேனான அவரையே திணற விட்டதோடு, சில நொடிகள் திகைக்கவும் வைத்தது கம்மின்ஸின் பந்து. ரூட்டை கம்மின்ஸ் வீழ்த்திய அந்த பந்தின் வீடியோ இதோ..