IPL 2023: மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளில் தலா 2 மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

csk win toss opt to field against mumbai indians in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே இடையேயான போட்டி தான் ஐபிஎல்லில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் போட்டி. 

மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளில் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிஎஸ்கே அணியில் மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய 2 முக்கியமான வீரர்களும் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ட்வைன் பிரிட்டோரியஸ் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நெஹல் வதேரா நீக்கப்பட்டு டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சிஎஸ்கே அணி: 

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), ஷிவம் துபே, ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், சிசாண்டா மகளா, துஷார் தேஷ்பாண்டே. 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios