தோனி காலில் விழுந்து வணங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டின் காதலி: வைரலாகும் வீடியோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை வென்றதைத் தொடர்ந்து ருத்துராஜ் கெய்க்வாட்டின் காதலியும், வருங்கால மனைவியுமான உட்கர்ஷா பவார் தோனி காலில் விழுந்து வணங்கியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அதோடு 171 ரன்களை வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன்!
இதையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியாக கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
இந்த வெற்றியை சிஎஸ்கே வீரர்கள் தங்களது மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், ருத்துராஜ் கெய்க்வாட் தனது வருங்கால மனைவியான மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையான உட்கர்ஷா பவார் உடன் சிஎஸ்கேயின் வெற்றியை கொண்டாடினார். அப்போது உட்கர்ஷா பவார் தோனியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் உட்கர்ஷா பவாருக்கு நாளை திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து அவர் விலகினார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டாண்ட் பிளேயராக இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிங் என்று நிரூபித்த ஜோ ரூட்; 11,000 ரன்களை கடந்து சாதனை!