திருப்பூரில் புதிய சூப்பர் கிங்ஸ் அகாடமியை அறிவித்த சிஎஸ்கே நிர்வாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திருப்பூரில் புதிதாக அகாடமியை திறக்க உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. சிஎஸ்கே அணி நிர்வாகமானது தமிழ்நாட்டின் பல இடங்களில் தங்களது கிளைகளை திறந்து வைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திருப்பூரில் அகாடமியை அறிவித்துள்ளது. அதுவும், சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 460 கிமீ தொலைவிலுள்ள யாலி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இந்த வசதி இருக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அகாடமி மூலமாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து வசதிகளையும் வழங்கும். அதுமட்டுமின்றி 8 ஆடுகளங்களைக் கொண்ட ஒரு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இருக்கிறது. இரவு நேரங்களில் விளையாட வசதியாக ஃப்ளட் லைட்களும் நிறுவப்பட்டுள்ளன.
ஃபர்ஸ்ட் போட்டியில் வெற்றி; 2ஆவது போட்டிக்கு தயாராகும் டீம் இந்தியா!
இந்த திட்டமானது 6 முதல் 23 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு வரும் டிசம்பர் முதல் கிடைக்கும். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: இந்த அகாடமியின் முக்கிய நோக்கமே தமிழ்நாடு முழுவதும் திறமைகளை வளர்ப்பது. இதற்கு முன்னதாக சென்னை, சேலம், ஒசூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அகாடமி செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து திருப்பூரில் புதிதாக அகாடமி திறக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Farmer Dhoni: ஏன் விவசாயியாக ஆனேன்? உண்மையை உடைத்த எம்.எஸ்.தோனி!
இவரைத் தொடர்ந்து, யாலி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் விஷ்ணு கோவிந்த் கூறியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் உதவியுடன் உயர்தர பயிற்சியாளர்களை திருப்பூருக்கு கொண்டு வருவதில் உற்சாகமாக இருப்பதாக கூறினார்.