ஐபிஎல் சீசனை ஆரம்பிச்சது வேணும்னா குஜராத்தா இருக்கலாம், முடிச்சு கொடுத்து சாம்பியனானது சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னையை வீழ்த்தியது. ஆனால், இறுதிப் போட்டியில் சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி ஐபிஎல் 2023 டைட்டிலை வென்றுள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் போட்டியில் ஒரு முறை சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
CSK vs GT IPL Final: 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
இதில் முதலில் ஆடிய சிஎஸ்கே 178 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதின. இதில், சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
எனக்கு ஈஸியானது நன்றி சொல்றது, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
அதன் பிறகு நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த 28 ஆம் தேதி சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐஎபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால், மழை காரணமாக நேற்று 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை ஆடிய போது மழை குறுக்கீடு இருந்தது. இதையடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில், சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுத்து ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?