சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.
சிஎஸ்கே அணி ஆடிய முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அதனால் இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும். கடந்த போட்டியில் ஆடம் மில்னே ஆடாததால் பிரிட்டோரியஸ் ஆடினார். இந்த போட்டியில் மில்னே ஆடுவார் என்பதால் பிரிட்டோரியஸ் நீக்கப்படுவார். மேலும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவிற்கு பதிலாக அண்டர் 19 உலக கோப்பையில் ஜொலித்த அண்டர் 19 வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சேர்க்கப்படுவார். கடந்த போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே சிஎஸ்கே அணி ஆடியது. மற்றுமொரு வெளிநாட்டு வீரருக்கான இடம் இருக்கிறது என்பதால் இந்த போட்டியில் முகேஷ் சௌத்ரிக்கு பதிலாக மஹீஷ் தீக்ஷனா சேர்க்கப்படலாம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வைன் பிராவோ, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, ஆடம் மில்னே.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. எனவே அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான், மயன்க் அகர்வால், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன் (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ஹர்ப்ரீத் ப்ரார், ராஜ் பாவா, ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.
