உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அகமதாபாத்தில் இன்று கேப்டன்ஸ் டே கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இன்று 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. நேற்றுடன் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் முடிந்த நிலையில், உலகக் கோப்பை நாளை தொடங்குகிறது.

அகமதாபாத் வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு: புன்சிரிப்புடன் நடந்து செல்லும் வீரர்கள்!

ஐசிசி கேப்டன்ஸ் டே:

ஐசிசி கேப்டன்கள் தினம் அக்டோபர் 4 புதன்கிழமை இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் கேப்டன்கள் தினம் நடைபெறுகிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை முதல் போட்டி தொடங்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தான் கேப்டன்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

டிவி அல்லது ஆன்லைன்/ஸ்ட்ரீமிங்கில் ரசிகர்கள் கேப்டன் தினத்தை எங்கு பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்களை ஐசிசி வெளியிடவில்லை. எனினும் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செயப்படுகிறது. அதோடு, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

World Cup Free Tickets: உலகக் கோப்பையில் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு வழங்க முடிவு!

உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள்:

இந்தியா – ரோகித் சர்மா

இலங்கை – தசுன் ஷனாகா

ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ்

நியூசிலாந்து – கேன் வில்லியம்சன்

இங்கிலாந்து – ஜோஸ் பட்லர்

பாகிஸ்தான் – பாபர் அசாம்

வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன்

தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா

ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி

நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் - ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடிக்கு கிடைத்த வெற்றி!

இந்திய அணி விளையாடும் போட்டிகள்:

அக்டோபர் 08: இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை, பிற்பகல் 2 மணி

அக்டோபர் 11: இந்தியா – ஆப்கானிஸ்தான் – டெல்லி, பிற்பகல் 2 மணி

அக்டோபர் 14: இந்தியா – பாகிஸ்தான், அகமதாபாத், பிற்பகல் 2 மணி

அக்டோபர் 19: இந்தியா – வங்கதேசம், புனே, பிற்பகல் 2 மணி

அக்டோபர் 22: இந்தியா – நியூசிலாந்து, தர்மசாலா, பிற்பகல் 2 மணி

அக்டோபர் 29: இந்தியா – இங்கிலாந்து, லக்னோ, பிற்பகல் 2 மணி

நவம்பர் 02: இந்தியா – இலங்கை, மும்பை, பிற்பகல் 2 மணி

நவம்பர் 05: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, கொல்கத்தா, பிற்பகல் 2 மணி

நவம்பர் 12: இந்தியா – நெதர்லாந்து, பெங்களூரு, பிற்பகல் 2 மணி

உலகக் கோப்பை டிராபியுடன் வரும் சச்சின்: கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான பிராண்ட் அம்பாஸிடராக நியமனம்!