சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக கிரிக்கெட் தொடர்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் ஆகியோருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. 

இவ்வாறு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்துவரும் நிலையில், டி20 உலக கோப்பை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 24ம் தேதி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. கொரோனாவின் தாக்கம் அதற்குள்ளாக குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை நடத்தப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

Also Read - கங்குலி, டிராவிட்டுக்குலாம் முக்கிய பொறுப்பு.. ஆனால் நீங்க, சொம்பு தூக்குறவனுக்கு மட்டும் தான் பதவி கொடுப்பீங்க.. பாக்., கிரிக்கெட் வாரியத்தை விளாசிய அக்தர்

கூடிய விரைவில் அனைத்தும் சரியாகி, விரைவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படும். டி20 உலக கோப்பை அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்குகிறது என்பதால், அதற்குள்ளாக நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்பிவிடும். அதனால் உலக கோப்பை நடத்துவதில் சிக்கல் இருக்காது. எனவே டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.