பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த நேர்மையான, திறமையான நபர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமிக்க மறுக்கிறது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஷோயப் அக்தர். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எலைட் கிளாஸ், அவர்களுக்கு கீழ் தலையாட்டும் பொம்மைகளைத்தான் வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஏனென்றால், அப்படிப்பட்டர் நபர்களை தங்களுக்கு கீழ் வைத்துக்கொண்டால்தான், தாங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்பார்கள் என்பதற்காக... எதிர்த்து பேசாத கிரிக்கெட் வாரிய தலைவர், எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கேப்டன், இப்படியான நபர்கள் தான் அவர்களுக்கு தேவை. 

Also Read - ஐபிஎல்லில் ஆட கூப்பிட மாட்டாங்களானு ஃபோனை கையில் வச்சுகிட்டே உட்கார்ந்திருக்கோம்.. ஆஸி., வீரர் ஓபன் டாக்

இந்தியாவில் பாருங்கள்.. பிசிசிஐ-யின் தலைவராக கங்குலி இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் இருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநராக ஸ்மித்தும் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும் இருக்கிறார்கள். இப்படியான நபர்களை நியமித்தால்தான் கிரிக்கெட் வளரும், அணி மேம்படும். பாகிஸ்தானில் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள மறுக்கிறது. டிவியில் உட்கார்ந்துகொண்டு கமெண்ட்ரி செய்வது எனது பணியல்ல என்று அக்தர் காட்டமாக பேசியுள்ளார்.