2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வென்ற வீரர்கள்.! முழு பட்டியல்
2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விருதுகளை வென்ற வீரர்களின் முழு பட்டியலை பார்ப்போம். எந்தெந்த விருதுகளை எந்தெந்த வீரர்கள் வென்றார்கள் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மெய்நிகர் விழாவாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
இப்போ இல்லைனா எப்போ..? இந்திய வீரருக்காக குரல் கொடுத்த பாக்., முன்னாள் வீரர்
இந்த ஆண்டு சிட்னியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், அலைஸா ஹீலி, எலிசா பெரி ஆகிய வீரர், வீராங்கனைகள் விருதுகளை வென்றனர்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகள்:
1. ஆலன் பார்டர் விருது - ஸ்டீவ் ஸ்மித்
2. பெலிண்டா கிளார்க் விருது - பெத் மூனி
3. ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஷேன் வார்ன் விருது - உஸ்மான் கவாஜா
4. கம்மியூனிட்டி இம்பாக்ட் விருது - உஸ்மான் கவாஜா
5. 2022ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் - டேவிட் வார்னர்
6. 2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்
7. 2022ம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வீரர் - மைக்கேல் நெசெர்
8. 2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை - டாலியா மெக்ராத்
9. 2022ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை - பெத் மூனி
10. 2022ம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வீராங்கனை - அன்னாபெல் சதர்லேண்ட்
11. பிராட்மேன் இளம் கிரிக்கெட்டருக்கான விருது - லான்ஸ் மோரிஸ்
12. பெட்டி வில்சன் இளம் கிரிக்கெட்டர் - கர்ட்னி சிப்பெல்