Asianet News TamilAsianet News Tamil

இப்போ இல்லைனா எப்போ..? இந்திய வீரருக்காக குரல் கொடுத்த பாக்., முன்னாள் வீரர்

சர்ஃபராஸ் கானை இப்போது இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை என்றால் எப்போதுதான் எடுப்பீர்கள் என்று பாகிஸ்தான்  முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, சர்ஃபராஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
 

danish kaneria speaks for sarfaraz khan who snub from india test squad even scoring more runs in domestic cricket
Author
First Published Jan 30, 2023, 10:15 PM IST

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்துள்ளார் சர்ஃபராஸ் கான்.

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

ஸ்பின் பவுலிங்கை ஒழுங்கா ஆடவே தெரியல.. இவன் எப்படி இரட்டை சதம் அடித்தான்..?

இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.  தொடர்ச்சியாக சதங்களாக விளாசி அசத்திவருகிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரஞ்சி போட்டியில் கூட 125 ரன்களை குவித்தார். 

சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அசாதாரணமான பேட்டிங்கை தொடர்ச்சியாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் எடுக்கப்படுகிறார் என்றால், ஒரு இடம் காலியாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால், டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில் அந்த இடத்திற்கு சூர்யகுமாரை விட, சர்ஃபராஸ் கானே  தகுதியான வீரர் என்பதே அனைவரின் கருத்து.  முன்னாள் வீரர்கள் பலருமே சர்ஃபராஸ் கான் புறக்கணிப்பை கடுமையாக விமர்சித்தனர். சர்ஃபராஸ் கானும் தனது வலியை பகிர்ந்திருந்தார்.

சர்ஃபராஸ் கானின் புறக்கணிப்பை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் விமர்சித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தணும்னா அந்த 2 வீரர்களை இந்திய அணி சமாளிக்கணும்..! இயன் சேப்பல் கருத்து

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, சர்ஃபராஸ் கானை விட சிறந்த ஃபார்மில் வேறு ஒரு இந்திய வீரர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அந்தளவிற்கு ஃபார்மில் இருக்கும் வீரருக்கு அணியில் இடம் இல்லை என்றால், அவரை இப்போது எடுக்கவில்லை என்றால், பிறகு எப்போதுதான் எடுப்பீர்கள்? அவரது நம்பிக்கைக்கு உரமூட்டவில்லை எனில் அது பாதிப்பாக இருக்கும். அவரது மனதை உடைத்துவிடும். எனவே அவர் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருங்கள் என்றார் டேனிஷ் கனேரியா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios