Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தணும்னா அந்த 2 வீரர்களை இந்திய அணி சமாளிக்கணும்..! இயன் சேப்பல் கருத்து

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் இந்திய அணி சிறப்பாக கையாண்டுவிட்டால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
 

ian chappell advice how india to beat australia in border gavaskar trophy test series
Author
First Published Jan 30, 2023, 5:51 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக டி20 தொடர் நடக்கிறது. இன்று முதல் டி20 போட்டி நடக்கிறது. இந்த டி20 தொடர் முடிந்த பின், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

ஷாஹீன் அஃப்ரிடிக்கு அருகில் கூட பும்ரா வரமுடியாது! வழக்கம்போலவே இந்தியா மீதான வன்மத்தை உமிழ்ந்த அப்துல் ரசாக்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.

58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய இந்திய வீரர்களுக்கு முக்கியமான டாஸ்க் என்றால் அது, நேதன் லயனுக்கு எதிராக நல்ல மனவலிமையை பெற்றிருக்க வேண்டும். அவர் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடும் மனநிலையில் இருக்க வேண்டும். நேதன் லயனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய, முக்கியமான அந்த 3 அஸ்திரங்களை (ஃபாஸ்ட் பவுலர்கள்) சார்ந்திருக்கும். 

IND vs NZ: ஹர்திக் பாண்டியாவின் மட்டமான கேப்டன்சி.. கம்பீர் கடும் தாக்கு

இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க் என்னவென்றால், செம ஃபார்மில் ரன்களை குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டுப்படுத்துவதுதான். ஸ்டீவ் ஸ்மித்தையும் நேதன் லயனையும் கட்டுப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறலாம் என்று இயன் சேப்பல் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios