டி20 கிரிக்கெட் வரலாற்றில் நினைத்து பார்க்கவே கஷ்டமான ஒரு சாதனையை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கோலின் ஆக்கர்மேன் படைத்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆக்கர்மேன் இங்கிலாந்தில் லீசெஸ்டெர்ஷைர் கவுண்டி அணிக்காக ஆடிவருகிறார். இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் லீசெஸ்டெர்ஷைர் மற்றும் வார்விக்‌ஷைர் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி லீசெஸ்டரில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லீசெஸ்டெர்ஷைர் அணி, 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் அடித்தது. 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வார்விக்‌ஷைர் அணியின் பேட்டிங் ஆர்டரை லீசெஸ்டெர்ஷைர் அணியின் கேப்டன் கோலின் ஆக்கர்மேன் சரித்தார். 

ஆஃப் ஸ்பின்னரான ஆக்கர்மேன், 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆக்கர்மேன் வீசிய 24 பந்துகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் தான் வீழ்த்தப்பட்டிருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் செய்வதற்கு கடினமான சம்பவம் இது. 24 பந்துகளில் 7 பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது அபாரமான பந்துவீச்சால், வார்விக்‌ஷைர் அணி 134 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து லீசெஸ்டெர்ஷைர் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆக்கர்மேனின் அபாரமான பவுலிங் ஸ்பெல் இதோ..