Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND அதெல்லாம் நாங்க இந்தியா நிர்ணயித்த இலக்கை அடிச்சுடுவோம்..! இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நம்பிக்கை

4வது டெஸ்ட்டில் இந்திய அணி நிர்ணயித்த 368 ரன்கள் என்ற அடித்துவிடுவோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

chris woakes believes england can chase the target set by india in fourth test
Author
Oval, First Published Sep 6, 2021, 4:32 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.

367 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் நன்றாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹசீப் ஹமீதும் அரைசதம் அடிக்க, அவருடன் டேவிட் மலான் இணைந்து ஆடிவருகிறார்.

இந்நிலையில், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து அடித்துவிடும் என்று கிறிஸ் வோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கிறிஸ் வோக்ஸ், இந்த பிட்ச்சில் இலக்கு என்னவாக இருந்தாலும் எட்டிவிடலாம் என்று நினைக்கிறேன். இது மிகச்சிறந்த சேஸிங்காக இருக்கப்போகிறது. எங்கள்(இங்கிலாந்து) தொடக்க வீரர்கள் வீரர்கள் நன்றாக ஆடி எங்கள் அணியை நல்ல நிலையில் வைத்திருக்கிறார்கள். கடைசி நாள் ஆட்டத்தில் 291 ரன்களை விரட்டுவது என்பது கடினமானது தான். ஆனால் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது என்றார் கிறிஸ் வோக்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios