ஐபிஎல் 14வது சீசன் கொரோனா 2ம் அலை பரவலுக்கு மத்தியில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

கொரோனா நெறிமுறைகளின்படி, அனைத்து வீரர்களும் குவாரண்டினில் இருக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் தான் ஐபிஎல் தொடர்பான அனைவரும் இருக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வரும் 12ம் தேதி முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பையில் நடக்கவுள்ளது. எனவே மும்பைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வந்த கிறிஸ் கெய்ல், 7 நாட்கள் குவாரண்டினை முடித்துவிட்டார்.

குவாரண்டினை முடித்த மகிழ்ச்சியை டான்ஸ் ஆடி கொண்டாடினார். சர்வதேச அளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சனின் மூன்வாக் ஸ்டெப்பை மிக அருமையாக ஆடி அசத்தியுள்ளார் கெய்ல். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.