127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சேப்பாக் அணியின் ஃபாஸ்ட் பவுலர் பெரியசாமி. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 126 ரன்களை எடுத்தது. 127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 114 ரன்களுக்கு சுருட்டி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை வென்றது. 

127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சேப்பாக் அணியின் ஃபாஸ்ட் பவுலர் பெரியசாமி. இலங்கை வீரர் மலிங்காவை போலவே பவுலிங் ஆக்‌ஷனை கொண்டுள்ள பெரியசாமி, அவரை போலவே மிகத்துல்லியமாக யார்க்கர் வீசுகிறார். 

Scroll to load tweet…

இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், தொடர் நாயகன் விருதையும் பெரியசாமிதான் வென்றார். துல்லியமான யார்க்கரில் பெரியசாமி விக்கெட் வீழ்த்தும் வீடியோ.. 

Scroll to load tweet…