CSK vs RCB, Chepauk Stadium: சேப்பாக்கம் யாருக்கு சாதகம்? 16 ஆண்டுகளுக்கு பிறகு சரித்திரம் படைக்குமா ஆர்சிபி?
ஐஎபிஎல் 2024 தொடரின் 17ஆவது இன்று தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்று இரவு 6.30 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
சிஎஸ்கே நியூ கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்:
இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் முறையாக களமிறங்குகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் ரூ.20 லட்சத்திற்கு தொடங்கி, 2022 ஆம் ஆண்டு முதல் ரூ.6 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடங்கும். 159 பவுண்டரி, 73 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்கள் எடுத்துள்ளார்.
சிஎஸ்கே – ஆர்சிபி நேருக்கு நேர்:
இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 31 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 முறை வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் சிஎஸ்கே அணியானது 4-1 என்று கைப்பற்றியிருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்:
இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கத்தில் நடந்த மொத்த போட்டிகள்:
இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறை வெற்றி பெற்றுள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு இருக்கா?
நேற்று இரவு லேசாக மழை பெய்துள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமையான இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக மைதானம் சற்று வறண்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
எம் சின்னச்சாமி ஸ்டேடியம், பெங்களூரு:
இதே போன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 5 போட்டியிலும், ஆர்சிபி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
சினிமா ரசிகர்கள்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்காக சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எஸ்.தோனி சகாப்தம்:
கடந்த 2010, 2011, 2018, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபியை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. ஒரு கேப்டனாக சிஎஸ்கே அணியில் 235 போட்டிகளில் விளையாடிய தோனி, 142 போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார். 90 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. சிஎஸ்கேயின் வெற்றி சதவிகிதம் 60.42 ஆகும். இந்த ஆண்டுடன் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
எந்த கேப்டனும் செய்யாத சாதனையை தோனி சிஎஸ்கே அணிக்காக செய்து கொடுத்தார். ஆனால், இந்த சீசனில் தோனி பேட்டிங் செய்வது என்பது கேள்விக்குறி தான். சிஎஸ்கே அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால் மட்டுமே தோனி 7ஆவது அல்லது 8ஆவது வரிசையில் வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், இந்த சீசனில் அவர் களமிறங்குவது என்பது அரிதான ஒன்று தான். ஏனென்றால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் அந்தளவிற்கு பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மஹீத் தீக்ஷனா, மொயீன் அலி, முஷ்தாபிஜூர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, அஜய் ஜதவ் மண்டல், பிரசாந்த் சோலாங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்க்ரேகர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அரவெல்லி அவனிஷ் ராவ், டெவோன் கான்வே.
குறிப்பு: டெவோன் கான்வே காயம் காரணமாக இதுவரையில் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத நிலையில், இனி வரும் போட்டிகளில் அவர் அணியுடன் இணைந்தால் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரையும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. மஹீத் தீக்ஷனா ஐபிஎல் தொடரின் சில போட்டிகளுக்கு இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது வருகை குறித்து இதுவரையில் எந்த தகவலும் இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசஃப், கரண் சரமா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, டாம் கரண், ஸ்வப்னில் சிங், விஜயகுமார் வைஷாக், லாக்கி பெர்குசன், மாயங்க தாகர், வில் ஜாக்ஸ், சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மனோஜ் பாடேஜ், யாஷ் தயால், சௌரவ் சௌகான், ராஜன் குமார், ஹிமான்ஸு சர்மா.
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையிலான போட்டியில்:
சிஎஸ்கேயின் அதிகபட்ச ஸ்கோர் – 226
குறைந்தபட்ச ஸ்கோர் – 112
அதிகபட்ச சேஸிங் ஸ்கோர் – 208
குறைந்தபடச் பாதுகாப்பான ஸ்கோர் – 148
அதிக ரன்கள் – எம்.எஸ்.தோனி – 751 ரன்கள்
சிறந்த பவுலிங் – ஆசிஸ் நெஹ்ரா – 4/10.
ஆர்சிபி:
ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோர் – 218
குறைந்தபட்ச ஸ்கோர் – 70
அதிகபட்ச சேஸிங் ஸ்கோர் – 149
குறைந்தபடச் பாதுகாப்பான ஸ்கோர் – 128
அதிக ரன்கள் – விராட் கோலி – 999 ரன்கள்
சிறந்த பவுலிங் – ஜாகீர்கான்– 4/17.
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையிலான கடைசி 5 போட்டி:
சிஎஸ்கே 4 வெற்றி, ஆர்சிபி ஒரு வெற்றி
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஐபிஎல் போட்டிகள்:
2023 - சிஎஸ்கே 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2022 - சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2021 - சிஎஸ்கே 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2020 – ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2019 - சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி
2018 - சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2015 - சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2014 – ஆர்சிபி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி
2013 – சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2012 – சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு போட்டி கைவிடப்பட்டது.
2011 - சிஎஸ்கே 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2010- ஆர்சிபி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2009 – ஆர்சிபி பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2008 – சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆர்சிபி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே – ஆர்சிபி அதிக ரன்கள்:
விராட் கோலி – 30 போட்டிகள் – 985 ரன்கள் – அதிகபட்சம் 90*
எம்.எஸ்.தோனி – 28 போட்டிகள் – 740 ரன்கள் – அதிகபட்சம் 84*
சுரேஷ் ரெய்னா – 25 போட்டிகள் – 616 ரன்கள் – அதிகபட்சம் 73*
- AR Rahman IPL 2024
- Asianet News Tamil
- CSK New Captain
- CSK New Skipper Ravindra Jadeja
- CSK Team Squad
- CSK vs RCB
- CSK vs RCB live
- Chepauk Stadium
- Faf du Plessis
- IPL 2024
- IPL 2024 All Captains List
- IPL 2024 CSK New Captain
- IPL 2024 asianet news tamil
- IPL 2024 live updates
- IPL 2024 opening ceremony live
- IPL 2024 opening ceremony performers
- IPL 2024 schedule
- IPL 2024 team list
- IPL cricket match 2024
- IPL date 2024
- IPL first match
- M A Chidambaram Stadium
- MS Dhoni
- Ruturaj Gaikwad
- Shubman Gill
- Suresh Raina
- TATA IPL 2024 news
- Virat Kohli
- chennai super kings vs royal challengers bangalore
- watch CSK vs RCB live streaming