நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து வெற்றியை கொண்டாடிய கிரிக்கெட் பிரபலங்கள்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலமானது தற்போது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. கிட்டத்தட்ட, 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர். இதில், இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இணைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து விக்ரம் லேண்டரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: அயர்லாந்தில் இருந்தபடியே வெற்றியை கொண்டாடிய டீம் இந்தியா!